300க்கும் மேற்பட்ட மக்கள் உண்ணாவிர போராட்டம்..!! பரபரப்பான மதிமுகம் ..!!
திருப்பத்தூரில் ஐந்தாவது பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா கடந்த திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் அவர் கூறியதாவது சட்டவிரோதமாக குற்ற சம்பவங்களில் ஈடுப்படுவர்களின் மீது கடுமையாக சட்டம் பாயும் என்றும் குற்றச்சம்பவங்களை படிப்படியாக குறைப்பேன் என்றும் கூறினார்
ராணிப்பேட்டை பாணாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 102 குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் புதிய நிரந்தர வீடு கட்டி தர வேண்டும் என கூறி 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிர போராட்டம் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சார்பில்,மழைநீர்சேகரிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வேங்கிக்கால் அருங்காட்சியகம் வரை பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பத்தூர் அடுத்த பெரும்மாபட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஜலக்கம்பாறை மற்றும் ஏலகிரி மலை பகுதியில் தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட ஜலகம்பாறை சூழல் சுற்றுலா தடத்தை மக்கள் பயன்பாட்டிற்காகவும் மற்றும் ஏலகிரி மலை சிறுவர் பூங்கா ஆகியவைகளை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் . அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஜலகாம்பாறை அருவி மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரபட்டி அருகே உள்ள எண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி வடிவேல் மலர் சாகுபடி செய்து அதனை தர்மபுரி பூ மார்கெட்டிற்கு சென்று விற்றுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பும் பொழுது திடீரென அவரது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மின்கசிவு காரணமாக கரும்புகை கிளம்பியதால் உடனடியாக வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு விலகினார்.பின்னர் அந்த வாகனம் மளமளவென பைக் தீப்பற்றி எரிய தொடங்கியது.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ட்டது.
மேலும் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..