கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கிருஷ்ணன் போல் வேடமடைந்து நடனமாடி அசத்தினர்கள்.
கும்பகோணத்தில் கார்த்தி வித்யாலயா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தியினை முன்னிட்டு கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களான அதிரசம், எள்ளடை, சீடை, தட்டை, பழங்கள் வெண்ணெய், உள்ளிட்டவை வைத்து கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் மாணவ மாணவிகள் கிருஷ்ணர், ராதே போலவும் அழகாக வேடம் அணிந்து வந்து கிருஷ்ணர் ராதையை நம் கண் முன்னே நிறுத்தினர். கிருஷ்ணர் போல வேடம் அணிந்த மாணவர்கள் குறும்புத்தனங்களை செய்து விளையாடினர்.
இரண்டாம் வகுப்பு மாணவர்கள் கிருஷ்ணரின் ஸ்லோகத்தை அழகாக கூறினர் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் கிருஷ்ணரை போல வேடம் அணிந்து வந்து தீராத விளையாட்டுப் பிள்ளை கிருஷ்ணன் என்ற பாடலை அழகாக ஆடி, பாடி அசத்தினர் கிருஷ்ணரின் பிறப்பை அழகாக நாடகம் மூலம் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் நடித்துக் காட்டினர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் வேடமடைந்து கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் சிறப்பு பரிசுயை பள்ளி தாளாளர் கார்த்திகேயன் வழங்கினார்கள்.
சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவியருக்கு பாராட்டி பாராட்டு உரையினையும் வாழ்த்தினையும் பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், வழங்கினார்கள். இதில் பள்ளி தலைமையாசிரியர் அம்பிகாபதி மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.