தமிழ் சினிமாவின் அம்மா..!! அட இவங்களுக்கு என்ன..?
தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த நடிகை யார் என்று கேட்டால் அந்த காலத்தில் நினைவிற்கு வருவது ஆச்சி மனோரம்மா அவர்களுக்கு அடுத்த பல நடிகைகள் தமிழ் சினிமாவில் அம்மா கதா பாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவர் மட்டுமே தமிழ் தெலுங்கு என சீனியர் ஹீரோ முதல் ஜூனியர் ஹீரோ வரை அம்மாவாக நடித்திருப்பார்.
வேற யாரு நம்ப சரண்யா பொன்வண்ணன் அவர்கள் தான். இவர் புகழ்பெற்ற நடிகராக இருந்தாலும் இவரின் மகள்கள் ஏன் நடிகராக வரவில்லை..? இவருக்கு இன்று என்ன ஸ்பெஷல் என்பது பற்றி பார்க்கலாம்.
சினிமாவும் வாழ்க்கை துணையும் :
கேரளம் மாநிலத்தை சேர்ந்த சரண்யா மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அவருக்கு நடிகையாக பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை இருப்பினும் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்..
அதன் பின் 1995ம் ஆண்டு நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்துகொண்டார்.., அதன் பின் 8 ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
குடும்ப வாழ்க்கையில் பயணித்து கொண்டிருந்த சரண்யா.., மீண்டும் சிறு சிறு கதா பாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்., அதன் பின் ராம் படத்தில் ஜீவாவிற்கு அம்மாவாக நடித்தார்.., அவர்கள் இருவரின் நடிப்பும் குறிப்பாக அதில் இடம் பெற்ற “ஆராரிறாரோ நான் இங்கு பாட” என்ற பாடல் மக்களிடையே வர வேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்து.., களவாணி, தவமாய் தவம் இருந்தேன், தென் மேற்கு பருவக்காற்று, பாண்டி போன்ற பல படங்களில் அம்மா கதா பாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.
பொதுவாக ஒரு படத்தில் வரும் வசனத்தை நாம் நிஜ வாழ்க்கையில் பேசுவோம் ஆனால் இந்த வசனம் நாம் நிஜ வாழ்க்கையில் பேசுவதை அவர் இயல்பாக பேசி இருந்தாலும் அது நல்ல வரவேற்பை பெற்றது..
“ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவான்”
இதை விட இன்னும் நகைச்சுவையாகவும் சிறந்த அம்மவாகவும் எம்-மகன் படத்தில் நடித்திருப்பார். அதிலும் இந்த வசனம்..
சரண்யா : அட எருமைங்களா உங்க மாமாவ ஏமாத்த தான் அங்க பிரதசனம் பண்றா மாதிரி நடிச்சுட்டு இருக்கன்டா..,
வடிவேலு : குழாய் அடியில விழுந்து என்ன பண்ண கோவில் வாசல்ல போயி தான் உருளணும்.
இப்படி நகைச்சுவையாக நடித்த இவர் நம்மை கண் கலங்க வைத்த படம் தான் வேலையில்லா பட்டதாரி..
அதிலும் இந்த வசனம் “நான் வாழுற வீடோ வாழ்ந்துட்டு இருக்க வீடோ அது இல்ல இது” என்று சொல்லி மகனின் உள்ளத்தில் கை வைத்து காட்டுவார்.., குறிப்பாக வேலையில்லாமல் சுற்றி திரியும் பிள்ளையை சீக்கிரம் வேலை கிடைக்கும் என்று நம்பிக்கையும் கொடுத்திருப்பார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழியிலும் அம்மா கதா பாத்திரத்திற்கு பேர் போன ஒரு சிறந்த நடிகை என்றால் அவர் “சரண்யா பொன்வண்ணன்”.
களவாணி மற்றும் எம்-மகன் ஆகிய இருப்பிடங்களில் பிலிம் பேர் வழங்கும் சிறந்த குணசித்திர நடிகைக்கான விருது,
தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக இந்திய தேசிய விருது, பிலிம் பேர் விருது, நார்வே விருது, எடிசன் விருது
எம்-மகன் படத்திற்காக தமிழக அரசு விருது,
களவாணி – சிறந்த துணை நடிகை விருது
ஒரு கல் ஒரு கண்ணாடி : நார்வே தமிழ்த் திரைப்பட விருது, பிலிம்பேர் விருது, விஜய் விருதுக்கு பரிந்துரை செய்யப் பட்டார்.
மற்றும் வேலையில்லா பட்டதாரி, நீர்ப்பறவை, குட்டிப்புலி, கொடி, மற்றும் கோலமாவு கோகிலா போன்ற படங்களில் விருதுகளை பெற்றுள்ளார். தமிழ் சினிமா நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்க தொடங்கியதில் அவர் பெற்ற விருதுகள் மட்டும் 24 என்பது குறிப்பிடதக்கது.
இப்படி தமிழ் சினிமா நாயகர்களுக்கு அம்மாவாக நடித்து நம்மை ரசிக்கவும்.., சிந்திக்கவும் வைத்த சரண்யா பொன்வண்ணன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.., அன்னாரின் பிறந்தநாளிற்கு மதிமுகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..