பெற்ற மகளுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய தாய்..! தந்தை செய்த அதிரடி..!
சென்னையை அடுத்த மேடவாக்கத்தை சேர்ந்தவர் சிவசங்கர். இவர் திருமண மண்டபத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரின் முதல் மனைவி அவரை பிரிந்து சென்ற நிலையில் கணவனை பிரிந்து வாழும் அக்கா மகள் மகேஸ்வரியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
மகேஸ்வரிக்கும் 1 வயதில் பெண் குழந்தை இருந்த நிலையில் மகேஸ்வரி மற்றும் அவரது குழந்தையை சிவசங்கர் ஏற்றுக்கொண்டு 8 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் மகேஸ்வரிக்கு ஆட்டோ ஓட்டுனர் செந்தில்குமார் என்பவருடன் கடந்த ஒன்றரை வருடங்களாக பழக்கம் ஏற்பட்ட நிலையில் சிவசங்கரை விட்டு செந்தில்குமார் என்பவருடன் சென்று வாழ்ந்து வருகிறார்.
மகேஸ்வரியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை வளர்ப்பு தந்தையான சிவசங்கர் படிக்க வைத்து வளர்த்து வருவதாக சொல்லப்படுகிறது .
இந்நிலையில் மகேஸ்வரி மற்றும் செந்தில்குமார் இவர்கள் இருவரும். சிவசங்கரை செல்போனில் அழைத்து தரக்குறைவாக பேசுவதாகவும், இருவரும் ஒன்றாக அடையின்றி எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும்.
சிறுமி கையில் செல்போன் இருந்தால் ஆபாசமாக பேசி வயதுக்கு வந்துவிட்டாயா, பாலியல் தொழிலுக்கு வருகிறாயா என கேட்டும் பல்வேறு ஆபாச வீடியோக்களை அனுப்பி கடந்த ஒராண்டாக கடும் பாலியியல் தொல்லை கொடுத்து, மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டதாக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிவசங்கர் புகார் அளித்தார்.
இதுகுறித்து முன்னதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் இதற்கு முன்னரே புகார் அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாம்பரம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சிவசங்கர் புகார் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவசங்கர். அக்கா மகள் பெத்தெடுத்தாலும் சிறுமியை தன் மகளாக வளர்பதாகவும், வேறு ஒரு நபருடன் சென்று அடிக்கடி ஆன்லைனில் பாலியல் தொழிலில் ஈடுபடும் மகேஸ்வரி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் செந்தில்குமார் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்கள் எங்களுக்கு அனுப்பிய அனைத்து ஆதரங்களையும் நாங்கள் வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளோம்.., அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
-லோகேஸ்வரி.வெ