‘6 இடங்களுக்கான மாநிலங்களவை எம்பி தேர்தல்’ இன்று முதல் தொடங்குகிறது வேட்புமனுத்தாக்கல்!

மாநிலங்களைவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.

தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதில் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், செல்வராஜ் மற்றும் சமீபத்தில் பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா ஆகியோரும், திமுகவின் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ரங்கராஜன் ஆகியோர் அடங்குவர்.

இதனையடுத்து காலியாகவுள்ள இந்த ஆறு மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் மார்ச் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களை திமுக ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஆனால் ஆளும் அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் காலியாக உள்ள இந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.

What do you think?

‘கொரோனா குறித்து கேள்வி எழுப்பிய வைகோ’ எழுத்து மூலம் பதிலளித்த மத்திய இணை அமைச்சர்!

‘கர்நாடகாவில் நிகழ்ந்த கோர விபத்து’ தமிழக பக்தர்கள் 10 பேர் பலி!