ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எம்.பி., நவாஸ்கனி ஆறுதல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களை ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது, டெல்லி காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் படுகாயமடைந்த மாணவர்கள் டெல்லி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அறவழியில் போராடும் மாணவர்களை தாக்குதல்கள் மூலம் அரசு ஒடுக்க நினைப்பதாக அவர் சாடியுள்ளார். இந்தியாவின் மாண்பை காப்பதற்காக மாணவர்கள் ரத்தம் சிந்தியிருப்பதாகவும் நவாஸ்கனி தெரிவித்துள்ளார். ஜனநாயக விரோதமாக செயல்படும் மத்திய அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நிச்சயம் வெல்லும் என்றும் எம்பி.நவாஸ்கனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்

What do you think?

2-வது நாளாக நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டம்

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் தேதி – கீழமை நீதிமன்றத்தில் பெறலாம்