‘கொரோனா முன்னெச்சரிக்கை’ 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொண்ட பாஜக எம்பி!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொண்ட பாஜக எம்பி சுரேஷ் பிரபு.

சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவிய தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. தற்போது இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 144 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

இந்த கொரோனா வைரஸை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக எம்பி சுரேஷ் பிரபு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அவ்ர் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற 2வது ஷெர்பாஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்தார். இதைத்தொடர்ந்து, நாடு திரும்பிய அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 14 நாட்களுக்கு தனது இல்லத்தில் தனிமையில் இருக்க இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

What do you think?

கொரோனா – மருத்துவர்களுக்கு 24 மணி நேர பணி

மார்ச் 31 வரை அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும்- உயர்நீதிமன்றம்