ஐபிஎல் ஓய்வு குறித்து எம்.எஸ்.தோனி அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நான்கு விக்கெட்டுக்கு 235 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி, பரிசளிப்பு விழாவில் சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
ஈடன் கார்டன் மைதானம் முழுவதும் மஞ்சள் நிற ஜெர்சியால் நிறைந்திருப்பது தொடர்பாக தல தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
“இங்கே கூடியிருக்கும் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி. அவர்கள் எனக்கு பிரியாவிடை கொடுப்பதற்காக இப்படித் திரண்டிருக்கக்கூடும். அவர்களின் ஆதரவிற்கு நன்றி. இவர்களெல்லாம் அடுத்தப் போட்டியில் தங்களின் சொந்த அணியான கொல்கத்தாவின் ஜெர்சிக்கு மாறிவிடுவார்கள் என நம்புகிறேன்” எனக்கூறினார்.
ஏற்கனவே கடந்த இரண்டு சீசன்களாக சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாடததற்கு தல தோனி தான் காரணம் என விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி, வீரராக மட்டுமே தொடர்ந்து வந்தார்.தற்போது ஐபிஎல்லில் இருந்து விலக முடிவெடுத்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.