மூடா நிலமோசடி விவகாரம்..!! சித்தராமையா மீது வழக்கு..!! ஆளுநர் அளித்த ஒப்புதல்..!!
மைசூர் மாநகராட்சி வளர்ச்சி குழுமத்தின் நிலம் முறைகேடு வழக்கு விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் அனுமதி வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்..
மைசூர் மாநகராட்சி வளர்ச்சி குழுமம் (மூடா) சார்பில் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதனால் வளர்ச்சி குழுமத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சிகள் அடுகடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.
ஆனால் சித்தராமையா தரப்பில் தன்னுடைய மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும். மூடாவின் சட்ட விதிமுறைகள் பின்பற்றி தான் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்..
மேலும் நான் முதல்வராக இருந்தபோது நிலம் ஒதுக்கீடு செய்யவில்லை. பாஜக ஆட்சி காலத்தில் தான் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
அதேசமயம் இந்த முறைகேடு விவகாராத்தில்.., முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளத எதிர்கட்சிகள், “முதலமைச்சர் சித்தராமையா பதவி விலக வேண்டும்”. முறைகேடு புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட விட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்த மூடா முறைகேடு விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்க கோரி சமூக ஆர்வலர் டி.ஜெ.ஆப்ரஹாம், ஆளுநர் தாவர்சந்த் கெலாடிடம் மனு கொடுத்துள்ளார்.
அது தொடர்பாக சித்தராமையாவிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். ஆளுநர் எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் சித்தராமையா, ஆளுநர் கெலாட்டை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்… இருப்பினும் இந்த விஷயத்தில் ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மூடா முறைகேடு புகாரில் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கி ஆளுநர் இன்று காலை ஒப்புதல் வழங்கி உள்ளார். அதற்கான கடிதத்தை மாநில தலைமை செயலாளர் ஷாலினி ரஜனீஷிக்கு அனுப்பி உள்ளார். ஆளுநர் கெலாட்டின் அதிரடி நடவடிக்கை மாநில அரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் முடிவுக்கு எதிராக என்ன செய்வது என்பது குறித்து இன்று மாலை கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூரு வந்துள்ளார். மேலும் மாநிலத்தில் பல பகுதிகளில் உள்ள அமைச்சர்கள் உடனடியாக பெங்களூரு திரும்ப வேண்டும் என்று துணை முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.இதனிடையில் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கி இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர், ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநர், மாநிலத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..