சருமத்தை அழகாக்கும் முல்தானி மெட்டி..! குறிப்பு -2
இதற்கு முன் உள்ள குறிப்பிலும் முல்தானி மெட்டி எந்த சருமத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பார்த்து இருந்தோம். அதில் குறிப்பிடாத ஒரு சில குறிப்புகளை இதில் பார்க்கலாம்.
தேன் முல்தானி மெட்டி :
வறண்ட சருமம் கொண்டவர்கள் இந்த முல்தானி மெட்டி தேன் பேஸ்மாஸ்க்கை பயன் படுத்தலாம். இந்த தேன் முல்தானி மெட்டியை மாய்ஸ்ரைசராக பயன் படுத்தலாம்.
செய்முறை :
ஒரு தேக்கரண்டி முல்தானி மெட்டி பவுடருடன், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து எடுத்துக்கொள்ளவும் பின் அதை 20 நிமிடங்கள் வரை முகத்தில் பூசி வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இதை செய்து வந்தால் வறண்ட சருமம் மென்மையாக மாறி என்றும் பொலிவுடன் இருக்கும்.
தக்காளி முல்தானி மெட்டி :
முகப்பருக்கள் அதிகம் உள்ளவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். பருக்களால் உண்டாகும் பாக்டீரியாக்களில் எதிர்த்து போராட இவை சிறந்தது. சருமத்தில் இருக்கும் சில மாசுக்களை அழித்து முகப்பரு வராமல் தடுக்கும்.
செய்முறை :
1ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடருடன், 1 ஸ்பூன் மஞ்சள் பொடி, 1 ஸ்பூன் சந்தனப்பொடி மற்றும் 2 ஸ்பூன் தக்காளி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து முகப்பரு மற்றும் தழும்பு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் முகத்தில் ஊறவைக்க வேண்டும்.
15 நிமிடம் கழித்து குளிரிந்த நீரில் முகம் கழுவ வேண்டும். வாரத்திற்கு மூன்று முறை இதை செய்தால் முகப்பரு மற்றும் தழும்பு மறைந்து விடும். சருமத்தில் ஒரு மாற்றம் தெரியும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..