மும்பையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல்..!

இந்தியாவுக்கு கடத்துவதற்காக இருந்த 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் மும்பையில் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் விமான நிலையத்தில் கள்ளநோட்டுகள் கடத்தப்படுவது தொடர்பாக மத்திய புலனாய்வு முகமை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஜாவேத் ஷேக் என்ற பயணியை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த பெட்டியில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து துபாய் மூலம் இந்தியாவுக்கு கள்ளநோட்டுகள் கடத்தவிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சுமார் 24 லட்சம் ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

What do you think?

பெட்ரோலிய, ரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு வெளியிட்ட குறிப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

இங்கேயுமா நித்யானந்தா? – ‘நோ சூடு நோ சொரணை’