“MURASOLI WILL TAKE IT” அஞ்சா நெஞ்சம் முரசொலி செல்வம் கடந்து வந்த பாதை…!!
மறைந்த முன்னாள் முதலமைச்சரின் கருணாநிதியின் மருமகனும் எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமானவர் முரசொலி செல்வம். நேற்று மாரடைப்பின் காரணமாக காலமானார்..
இவர் கருணாநிதியின் உடன்பிறந்த சகோதரி சண்முக சுந்தரம்மாள் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.., தன்னுடைய சொந்த மகள் செல்வியை முரசொலி செல்வம் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்..
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார்..
கலைஞரின் சொந்த அக்கா மகனும், முரசொலி மாறனின் தம்பியுமான, முரசொலி செல்வம்., திமுகவின் முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றினார் என சொல்லலாம். தொடர்ந்து 33 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் செயல் ஆற்றினர்.
குறிப்பாக முரசொலியில் வரும் பெட்டிச் செய்திகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் ஆசிரியர் முரசொலி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்குப் பின், அந்த இடத்தில் இருந்து முரசொலி செல்வம் இதனை தொடர்ந்து எழுதினார்.. இந்த செய்திகள், திமுகவினர் மட்டுமின்றி பொதுவான வாசகர்களின் கவனத்தையும் ஈர்த்து வந்தது. 1989 முதல் செல்வம் முரசொலி நாளேட்டைக் கவனித்து வந்தார்.
கடந்த 1991ம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில், அப்போதைய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பரிதி இளம்வழுதி, தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு தொடர்பாக பேரவையில் பேசப்பட்டதை தனது பத்திரிக்கையில் வெளியிட்டார். அதனால் அவர் மீது அதிமுக சார்பில் வழக்கு பதிவு செய்யபட்டு சட்மன்றத்தில் கூண்டில் ஏற்றப்பட்டார்.
அதனையடுத்து முரசொலி மீதான உரிமை மீறல் பிரச்சினையால் அப்போதைய சபாநாயகராக இருந்த சேடப்பட்டி முத்தையா முரசொலி செல்வமிற்கு அளித்த உத்தரவின்படி அவர் சட்டமன்றத்தில் ஆஜராகினார். அங்கு அவரிடம் விசாரணை செய்வதற்காகவே சட்டமன்றத்தில் ஒரு கூண்டு வைக்கப்பட்டது. அந்த விசாரணைக்கு பின் அவர் மீதான கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பிரசாரத்திற்காக வந்த போது அவர் சுட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதியன்று நள்ளிரவில், முரசொலி அலுவலகம் தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது.
அந்த தாக்குதலில் வாகனங்கள், ஆவணங்கள், அச்சுக் காகிதங்கள், அச்சகம் எல்லாம் எரிந்து கருகிய நிலையில், மறுநாளே முரசொலி நாளிதழ் அச்சிடப்பட்டது. அப்போது முரசொலி செல்வம் வைத்த தலைப்பு “Murasoli will take it”. என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட இந்த செய்தி மக்களிடையே வரவேற்பை பெற்றாலும்
இந்தியா முழுவதும் சில பத்திரிகையாளர்களால் முரசொலி செல்வம் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது, ஆனால் எவ்வளவு வழக்குகள் போட்டாலும் அடக்கு முறைக்கு அஞ்சாமல் துணிச்சலாக எதிர்த்து நின்று போராடி தன்னுடைய பத்திரிக்கையை மீட்டெடுத்தார்..
பூம்புகார் புரொடக்ஷன்ஸ் சார்பில் சில படங்களை முரசொலி செல்வம் தயாரித்துள்ளார். அவரது தயாரிப்பில், இது எங்க நாடு, பூக்காரி, அணையா விளக்கு, திருட்டு ராஜாக்கள், காவல் கைதிகள், குற்றவாளிகள், காகித ஓடம், குலக்கொழுந்து ஆகியவை முக்கியமான படங்களாகும். அவரது மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக – வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர், என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம்.
தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த அந்தக் கடைசித் தோளை – கொள்கைத் தூணை இன்று இழந்து நிற்கிறேன்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..