முருகன் திருமந்திரம் – எந்த கிழமை என்ன மந்திரம்..? கிடைக்கும் வரம்..!
செவ்வாய்க்கிழமை என்றாலே சுப்பிரமணியருக்கு மிகவும் ஊகுந்த நாள். அன்றைய நாளில் காலையில் குளித்து அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பின் வீட்டிற்கு வந்து வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை முடிக்க வேண்டும்.
கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகருக்கு உரிய பாடல்களை கேட்கலாம் அல்லது துதிக்கலாம்..
இன்னும் சில ஆன்மிக மந்திரங்களை சொல்லி துதித்தால்.. அன்றைய நாளில் மட்டுமல்ல நமக்கான பிரச்சனைகள் நீங்கி விடும்..
வாரத்தில் 7 நாட்களுக்கும் ஒவ்வொரு முருகன் மந்திரங்கள் உண்டு.., அதனை துதித்தால் துன்பங்கள் நீங்கிவிடும் என சொல்லுவார்கள் அப்படியாக இன்றைய நாளுக்கனா மந்திரம்..
செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி..!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி..!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி..!
இந்த மந்திரத்தை காலை அல்லது மாலை நேரங்களில் வீட்டில் தீபம் ஏற்றி விற்று,. பூஜை அறையில் அமர்ந்து மனதில் உள்ள கவலைகளை மறந்து இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.. அப்படியாக தொடர்ந்து 3 வாரங்களாவது சொல்ல வேண்டும். அப்படி செய்தால் நம் மனதில் நினைத்த காரியங்கள் வெற்றி பெரும்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..