செவ்வாய்கிழமை முருகன் வழிபாடு..! கிடைக்கும் வரம்..!
செவ்வாய்க்கிழமை என்றாலே சுப்பிரமணியருக்கு மிகவும் ஊகுந்த நாள்.
அன்றைய நாளில் காலையில் குளித்து அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும்.
பின் வீட்டிற்கு வந்து வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை முடிக்க வேண்டும்.
கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய பாடல்களை கேட்கலாம் அல்லது துதிக்கலாம்..
உச்சம் பெற்ற ராசிகாரர்கள் :
மேஷம் :
மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதி செவ்வாய் ஆவார். இந்த செவ்வாய் மகரத்தில் உச்சம் பெறுவார்.
கடகம் :
கடகத்தில் நீச்சம் பெறுவார். சிம்மம் மற்றும் மகர ராசிக்கு செவ்வாய் யோகத்தை செய்யக் கூடிய கிரகம் ஆவார் செவ்வாய்க்கு உரிய எண் 9..
மாலை பூஜை :
அதன்பின் மாலை 6 மணிக்கு மீண்டும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.
கிடைக்கும் வரம் :
தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் விரதமிருந்து முருகனை உளமாற வழிபடுவதால், உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பின் அதன் தீவிரம் குறைந்து நன்மை உண்டாகும்.
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும்.
பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும்.
கோழைத்தனம், பய உணர்வுகள் நீங்கி, தைரியம் மற்றும் தன்னம் பிக்கை பிறக்கும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந் து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
– லோகேஸ்வரி. வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..