காதலிலும் இசை..! சந்தோஷத்திலும் இசை..! துக்கத்திலும் இசை..!
90களில் இவருடைய பாடல்களை கேட்டு ரசிக்காத ரசிகர்களே இல்லை என்றே சொல்லலாம் சில பாடல்கள் எந்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் ரசிக்கும்படியாக இருக்கும் அப்டித்தான் இவருடைய பாடலும் கிராமங்களில் இந்த பாடலை கேட்டு ரசித்து வயல்வெளிகளில் வேலை செய்பவர்கள் பலர் நீங்களும் வயல்வெளிகளில் பாடல் கேட்டு வேலை செய்யும் பழக்கம் உள்ளவர்கால..?
உன் கைகளில் இருக்கும் வளையல்கள் அனைத்தும் கல,கல என சத்தம் போடும் பொழுது எனக்கு ஏனோ கவிதைகள் பாடுவது போல் இருக்கிறது.
என் கண்களில் காயம் பட்டாலும் உன் கைவைத்தால் போதும் அது தானாக ஆறிவிடும் இந்த பாடலை இளையராஜா இசையமைக்க, பாடகர்கள் லதா மங்கேஸ்கர், எஸ்.பி. பாலசுப்ரமணியம் இருவரும் சேர்ந்து பாடிய பாடல் இது .
வலையோசை கல
கல கலவென கவிதைகள்
படிக்குது குளு குளு தென்றல்
காற்றும் வீசுது
கண்ணே என் கண்
பட்ட காயம்கை வைக்க
தானாக ஆறும்………
யாரும் ஏதும் சொல்லாமலேயே குயில் எல்லாம் தேனாக பாடுது, ஓடையில் செல்கின்ற நீர் போல இந்த உலகமும் அதுபோல ஓடுகின்றது இந்த காலம் உள்ளவரை அது போகும்.
இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா அமைத்தது மட்டும் இன்றி பாடலையும் பாடியிருக்கிறார் பாடகர்கள், இளையராஜா மற்றும் எஸ். ஜானகி இருவரும் சேர்ந்து பாடிய பாடல் இது.
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல…….
அதிக அசைய வச்சி ஏன் மாமா என்னைக்கிட்ட மறச்சி வச்சிருக்க தன்னுடைய மாமாவிடம் கேட்கும் விதமாக அமையும் பாடல் இது, இந்த பாடலை இசையமைப்பாளர் இளையராஜா இசையில், எஸ்.ஜானகி, ரவி பாரதி இருவரும் சேர்ந்து பாடிய பாடல் இது .
ஆசை அதிகம் வச்சு…
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா…
ஆள மயக்கிப்புட்டு…
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா…
கிராமத்து பாடல்களில் உங்களின் மனம் கவர்ந்த பாடல் எது ?
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..