‘விமான நிலையத்திலிருந்து வெளியேறிய முதலமைச்சர்’ இடைமறித்த இஸ்லாமிய அமைப்பினர்!

கோவை விமான நிலையத்தில் வைத்து முதலமைச்சர் பழனிசாமியை இடைமறித்த ஐக்கிய ஜமாத் அமைப்பினர்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் தலைநகர் சென்னை உட்பட பல இடங்களிலும் தொடர்ந்து இந்த CAA, NRC, NPRக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகின்றது.ஆனால் முதலமைச்சர் பழனிசாமியோ இந்த சிஏஏவால் யாருக்கும் பாதிப்பில்லை என்றும் என்பிஆரில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விருப்பமிருந்தால் பதில் கூறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையிலிருந்து, கோவைக்கு விமானம் மூலமாக சென்றார். அப்போது கோவை விமான நிலையத்தில் வைத்து முதலமைச்சர் பழனிச்சாமியை ஐக்கிய ஜமாத் அமைப்பினர் திடீரென இடை மறித்தனர். பின்பு இந்த சிஏஏ, என்பிஆர், என்ஆர்சியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிய அவர்கள் மேலும் இதற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

What do you think?

‘உங்களால் தான் அப்பா’ நடிகர் விக்ரமிற்கு மகன் துருவ் எழுதிய உருக்கமான கடிதம்!

இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ள இத்தாலியர்கள் 15 பேருக்கு கொரோனா வைரஸ்!