மீனவர்களாக இருக்க வேண்டுமே தவிர மீன் சாப்பிடுபவராக இருக்க கூடாது..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு..!!
தமிழக அரசு சார்பில் சென்னை மீனவ மக்களின் குறை கேட்பு முகாம் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் தமிழக அரசு சார்பில் மீனவர் குறை கேட்பு முகாம் நடைபெற்றது. இதில் உத்தண்டி முதல் ஊரூர் குப்பம் வரையிலான 13 மீனவ குடியிருப்பை சார்ந்த மக்களிடம் அவர்களின் குறைகளை மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கேட்டறிந்தனர்.
அப்போது மீன் வலை பின்ன இடம், சாலை வசதி, சமூதாய கூடம், மீன் விற்பனையகம், ஐஸ் பேக்ட்ரி, மீன் உளர்த்தும் கூடம், பட்டா போன்றவை மீனவர்கள் கோரிக்கைகளாக முன்வைத்தனர். மேலும் தூண்டில் வளைவு அமைப்பது முக்கிய கோரிக்கையாக முன்வைத்த நிலையில் மத்திய அரசு அதற்கான அனுமதி வழங்காமல் உள்ளது என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் உள்ள காரணம் என சுட்டி காட்டினார்.
பின்னர் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் , இன்னும் ஓரிரு வாரங்களில் மீனவர்கள் தெரிவித்த குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்ததோடு மீனவர்களுக்கு நலதிட்டங்களையும் வழங்கினார்.
அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீனவர் நல வாரியத்தில் இணைக்கப்படும் நபர்கள் மீனவர்களாக இருக்க வேண்டும், மீன் சாப்பிடுபவராக இருக்க கூடாது என கூறினார்.
இதில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், மற்றும் துறை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..