நியாயவிலைக் கடைகளின் 2000 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்..!
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களால் செயல்படுத்தப்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளில் 2000 காலி இடமான விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணி இடங்களை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் நேரடியாக வரவேற்க்கப்படுகின்றன.
காலி இடங்கள்: 2000
பணி: விற்பனையாளர்
தகுதி: தமிழில் பேசவும் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ஊதியமாக ஓராண்டிற்கு மாதம் ரூ.6250/- கொடுக்கப்படும், பிறகு மாதம் ரூ. 8600 முதல் ரூ.29000 வரை வழங்கப்படும்.
பணி: கட்டுநர்
தகுதி: தமிழில் பேசவும் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ஊதியமாக ஓராண்டிற்கு மாதம் ரூ.5500/- கொடுக்கப்படும், பிறகு மாதம் ரூ. 7800 முதல் ரூ.26000 வரை வழங்கப்படும்.
வயதுவரம்பு: எம்பிசி, எஸ்சி, எஸ்டி, பிசி, சீர்மரபினர் மேலும் இந்த வகுப்பில் உள்ள மாற்றுதிறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர்களுக்கு வயது வரம்பு இல்லை.
ஓசி பிரிவினர்கள் 32 வயதுக்குள்ளேயும், இதே பிரிவினை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 50 வயத்துக்குள்ளும் மற்றும் மாற்றுதிரனாளிகள் 42 வயத்துள்ளும் இருத்தல் வேண்டும்.
தேர்வி செய்யும் முறை: கல்வியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், வகுப்பு வாரியான இன அடிப்படையிலும், இதர அரசானை படியும், சட்டத்தின் அடிப்படையில் வரும் முன்னுரிமை அடிப்படையிலும் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவார்.
கட்டணம்: கட்டணமாக விற்பனையாளர் பணிக்கு ரூ.150 மற்றும் கட்டுநர் பணிக்கு ரூ.100 அளிக்க வேண்டும்.
எஸ்சி,எஸ்டி, எல்லா பிரிவிலும் மாற்றுத்திரனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கும் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: https://www.drbcdl.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.11.2024