கூந்தல் வெடிப்பை தடுக்க சில டிப்ஸ்…!
* ஹேர் ஆயில் பயன்படுத்தி வாரம் இரண்டு முறை தலைக்கு மசாஜ் செய்து குளிக்க வேண்டும். தலையில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* சில இடங்களில் தண்ணீரில் குளோரின் கலந்து இருக்கும், அத்தகைய தண்ணீரில் தலைமுடிக்கு குளிக்கக் கூடாது. குளோரின் தலைமுடிக்கு நல்லது இல்லை.
* தலைக்கு குளித்துவிட்டு வந்த உடனே சீப்பு பயன்படுத்தி முடியை சீவக் கூடாது இதனால் முடி உடைய வாய்ப்புள்ளது.
* தலைமுடியை சிக்கு எடுக்க பெரிய பல் உள்ள சீப்பை பயன்படுத்த வேண்டும். மேலும் தலைக்கு கெமிக்கல் உள்ள ஷாம்பூ பயன்படுத்த கூடாது. தலைமுடிக்கு ஆர்கானிக் பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.
* தலைமுடியை ஸ்ட்ரெய்ட்னிங் செய்யும் போது தலைமுடி ஈரமாக இருத்தல் கூடாது. இது முடி வெடிப்பை உண்டாக்கும்.
* தலைமுடியை காயவைக்க ஹேர் ட்ரையரை அதிக சூடாக பயன்படுத்த கூடாது.
* தலைமுடிக்கு ஏற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு பொருட்களை கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.
* முடியை கலரிங்க் செய்ய ரசாயனம் உள்ள பொருட்களை பயன்படுத்தினாலும் முடியின் நுனியில் வெடிப்பு உண்டாகும்.
