“முத்துராமலிங்கதேவர் -117” பசும்பொன்னில் திருவிழா கோலம்..!!
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவராக இருப்பவர் முத்துராமலிங்க தேவர் அவர்களின் பிறந்தநாள்..
இன்றைய நாளில் அவரை பற்றிய ஒரு சிறு தொகுப்பை பார்க்கலாம்..
முத்துராமலிங்க தேவர்.. ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் வாழ்ந்தவர்..
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் தலைமையில் சில தலைவர்கள் ஒன்றாக கூடி பிரிட்டானிய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்..
அதேபோல் இந்திய தேசிய இராணுவத்திற்காக தமிழகத்தில் இருந்து பெரும் படையைத் திரட்டியவர் முத்துராமலிங்க தேவர்.
ஆன்மீகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்த்த சிறந்த தலைவராகவும் விளங்கியவர்.. முத்துராமலிங்க தேவர்..
இவரது பிறந்த நாளை ஆண்டுதோறும் தமிழக அரசு பசும்பொன்னில் கொண்டாடி வருகிறது.
இன்று பசும்பொன்னில் நடைபெறும் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் இவரை வணங்குகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..