AngryAngry

‘யாரும் எதிர்பார்க்காத கூட்டணி’ மிஷ்கினுடன் கைகோர்க்கும் வடிவேலு!

இயக்குனர் மிஷ்கினின் புதிய படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சைக்கோ படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் விஷாலை வைத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்தார். அந்த படத்தில் அவருக்கும், விஷாலுக்கும் இடையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக மிஷ்கின் அப்படத்திலிருந்து வெளியேறினார்.

அதன் பின் அவர் நடிகர் சிம்புவிடம் ஒரு கதையை கூறி சம்மதம் வாங்கிவிட்டதாகவும் ‘மாநாடு’ படப்பிடிப்பு முடிந்த பின்பு மிஷ்கின் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தில் மற்றுமொரு சுவரசியமாக வடிவேலு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் வடிவேலு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தையும்,எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட சிக்கலால் எந்தவொரு படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

‘ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும்’ ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் கோரிக்கை!

மீண்டும் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்!