அரியலூரில் மர்ம விலங்கு அட்டசகாசம்..!! பீதியில் பொது மக்கள்..!!
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியாத்து குறிச்சி கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன்
என்ற விவசாயி மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மாடுகள் மிரண்டு ஓடிய நிலையில் அந்த பகுதியில் இரண்டு மிருகங்கள் நிற்பதைக் கண்டு அலறி ஓடி உள்ளார்.
அப்போது அந்த புலி போன்ற மிருகங்கள் பரமசிவம் கரும்பு கொள்ளைக்குள் புகுந்து ஓடியுள்ளது இதனை அடுத்து கிராம முக்கியஸ்தர்கள் மூலமாக ஆண்டிமடம் போலீசருக்கும். மாவட்ட வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சத்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த மக்கள் வயல் வெளிகளில் சில கால் தடங்கள் இருப்பதும் அது ஒருவேளை புலி (அ) சிறுத்தை கால் தடமாக இருக்கலாம் எனவும் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். ஆய்வு செய்த வனத்துறையினர் இந்த கால் தடங்கள் புலியின் கால் தடங்கள் இல்லை என தெரிவித்தனர்.
வேறு ஏதேனும் விலங்குகளின் கால் தடமாக இருக்கலாம் என்று அதன் பாத சுவடுகளை பதிவு செய்து ஆய்வுக்காக எடுத்துக் கொண்டனர்.
புலி நடமாட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் கடலூர் மாவட்டத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும் ஆண்டிமடம் பகுதியில் திருகோணம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது.
இந்த வனப்பகுதிகளில் இருந்து புலி போன்ற வனவிலங்குகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனென்றால் நடுவில் உள்ள கிராமங்களை தாண்டி விலங்குகள் வருவதற்கான வாய்ப்பு இல்லை என பல துறையில் தெரிவிக்கின்றனர்.
எனினும் இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது மர்ம விலங்குகள் நடமாட்டம் குறித்து வனத்துறை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபாட்டுள்ளனர்.
இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த மர்ம விலங்குகளை பற்றி மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என பொதுமக்களிடம் வனதுறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நிஜவாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் அம்புலி படத்தில் வருவதை போல் உள்ளது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த மிருகம் எப்படி திடிரென வரும். வருவதற்கு காரணம்.., இதுவரை இதுபோல் நடக்காத இந்த மர்ம நிகழ்வு தற்போது நிகழ்வதற்கு என்ன காரணம்..? என வனத்துறையினர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
இந்த மர்ம மிருகங்களை பிடிக்கும் வரை பொது மக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் பொதுமக்களிடம் கேடு கொண்டுள்ளனர். அந்த மர்ம விலங்குகளை பிடிபதற்கான பணி தீவிரபடுதப் பட்டுள்ளதாகவும்.., வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.