நேபாளத்தில் மாயமான ஹெலிகாப்டர்..!! சென்ற 6 பெரும் உயிர் இழப்பு..!!
எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிட நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு 5 வெளிநாட்டவர்கள் உட்பட 6பேர் மானங் ஏர் நிறுவன ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானது. அந்த ஹெலிகாப்டரின் தகவல் திடீரென துண்டிக்கப்பட்ட நிலையில் மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி நடந்துள்ளது.
இதுகுறித்து உள்ளுர் அதிகாரி ஞானேந்திர புல் கூறுகையில், “சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் நேற்று காலை 10:12 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டிருந்த துண்டிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மாயமான ஹெலிகாப்டரில் சென்று 5 பெரும் வெளிநாட்டவர்கள்.., ஒரு பைலட் மற்றும் 5 வெளிநாட்டவர்கள் உட்பட 6 பேர் சென்றுள்ளனர். மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரம் ஆக்கப்பட்ட நிலையில் கட்டுப்பாட்டு அறைக்கு மாயமான ஹெலிகாப்டர் குறித்து ஒரு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த ஹெலிகாப்டர் மேலே சென்று கொண்டிருந்த போது இமையமலையின் மீது மோதி விபத்து ஏற்பட்டு நொறுங்கி விழுந்துள்ளது,. அதில் பயணித்த விமானி உட்பட பயணித்த 5 பேரும் இறந்துள்ளனர். என தகவல் வெளியானது.
மேலும் இந்த விபத்திற்கு என்ன காரணம் என்று குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.