தானியார் மருத்துவமணையில் மர்ம முறையில் மூதாட்டி கொலை.. போலீஸ் விசாரணை..!
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை (மீனாட்சி மிஷன்) செயல்பட்டுவருகிறது. 6 தளங்களை கொண்டுள்ள இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இங்கு உள்ள உணவகங்களிலும் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனை உணவகத்தில் பணிபுரியும் 70வயது மதிக்கதக்க முதாட்டியான முத்துலெட்சுமி என்பவர் 6ஆவது தளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பாக மாட்டுத்தாவணி காவல்நிலையத்திற்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் மூதாட்டி அணிந்திருந்த தங்க நகை காணாமல் போன நிலையில் நகையை திருடுவதற்காக மூதாட்டியை முகத்தை மூடி கொலை செய்தனரா? வேறு எதும் காரணமா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் பிரதான பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்