கைவரிசை காட்டிய மர்மநபர்கள்..! 27 சவரன் நகை கொள்ளை..! இந்த கிராமத்தில் மட்டும் தொடரும் நகை பறிப்பு..!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் ஓய்வுபெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் தமிழரசன் இவர் தற்போது மகன் அரவிந்தனுடன் இணைந்து மளிகைகடை நடத்தி வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு தமிழரசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். மனைவி மகன் உடனிருந்து கவனித்து கொள்வதால் அவர்களது வீடு பூட்டி இருந்துள்ளது.
நேற்றிரவு பூட்டிய வீட்டில் வெளிச்சம் தெரிந்ததை அடுத்து அருகிலுள்ளவர்கள் வந்து பார்த்த போது வீடு திறந்து இருந்துள்ளது. உள்ளே சென்று பார்க்ககயில் வீட்டில் திருட்டு நடந்தது தெரியவர தமிழரசன் மகன் அரவிந்தனுக்கு தெரிவித்தனர்.
அவர் வந்து பார்க்கையில், வீட்டின் பூட்டை உடைத்து பிரோவில் இருந்த 2 நெக்லஸ், 3 செயின், 3 மோதிரம், தோடு 1 செட் என 27 சவரன் நகை, 30 ஆயிரம் பணத்தினை திருடி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து இரும்புலி குறிச்சி போலிசார் தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..