ஆரோக்கியமான வாழ்க்கைக்கு – நச்சுனு அஞ்சு டிப்ஸ்..!!
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் சில உணவுமுறைகள் பற்றி தினமும் பார்த்து வருகிறோம். அதில் இன்று நாம் பார்க்க இருப்பது.
பாகற்காய் : பாகற்காய் கசப்பு என்று நாம் அனைவரும் நினைத்துகொண்டு இருக்கிறோம், ஆனால் அவற்றை வாரத்திற்கு ஒரு முறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனால் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் கரையும். கேன்சர் செல்கள் உற்பத்தியாவதை தடுக்கும்.
கிவி பழம் : கிவி பழத்தில் வைட்டமின்-சி இருப்பதால், சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. வாரத்திற்கு மூன்று முறை கிவி எடுத்துக்கொண்டால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்துவிடும்.
பீர்க்கங்காய் : பீர்க்கங்காய் இலையின் சாற்றை எடுத்து சூடுபடுத்தி, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.
புடலங்காய் : வாரத்தில் இரண்டு முறை புடலங்காய் உணவில் எடுத்துக்கொண்டால் குடல்புண், வயிற்று புண் மற்றும் தொண்டை புண்களை ஆற்றும்.
அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு உணவு.
வாழைத்தண்டு : வாரத்தில் ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உடல் பருமனை குறைக்கவும். சிறுநீரக கற்கள் கறையவும், உதவுகிறது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கியமான தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
வெ.லோகேஸ்வரி.