ஆரோக்கியமான வாழ்க்கைக்கு – நச்சுனு அஞ்சு டிப்ஸ்..!!
கடந்த சில தினங்களாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான சில குறிப்புகள் பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம்.., அதில் இன்று நாம் காண இருப்பது.
வாழைப்பழம் : தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள யூரிக் ஆசிட் திரவ நிலைக்கு மாறிவிடும்.
கொய்யாக்காய் : தினமும் ஒரு கொய்யாக்காய் எடுத்துக்கொண்டால், மலசிக்கல் நீங்கி விடும். உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கொடுக்கும்.
சாத்துக்குடி : வைட்டமின் சி, அதிகம் இருப்பதால்.., உடலுக்கு சிறந்த ஆற்றல் கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
வேப்பம் பழம் : வேப்பம் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சொறி சிரங்கு, படை, போன்ற பிரச்சனைகள் தீரும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
திராட்சை பழம் : திராட்சையில் வைட்டமின் சி, இருப்பதால் ஆஸ்துமா போன்ற பிரச்சனை களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. வாரத்திற்கு நான்கு முறை எடுத்துக்கொண்டால் நுரையீரல் பிரச்சனைகளை குணப்படுத்தும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கியமான தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி