ஆண்களின் முக அழகிற்கு நச்சுனு மூன்று டிப்ஸ்..!! இதை ட்ரை பண்ணுங்க ..!
பெண்களை போலவே ஆண்களுக்கு அழகாக ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதே நேரம் எந்த வகையான கீரிம் உபயோகிக்கலாம், அதனால் பின் விளைவு எதாவது ஏற்படுமா என்ற குழப்பமும் இருக்கும்.
ஆண்களின் சருமத்தில் வரும் கரும்புள்ளி, பருக்கள், மற்றும் தோல் சுருக்கம், அதை இயற்கையாகவே சரி செய்யும் மூன்று பேஸ்பேக் பற்றி பார்க்கலாம்..,
பளப்பான சருமத்திற்கு : ஆண்கள் வெயிலில் அதிக நேரம் சுற்றும் பொழுது அவர்கள் சருமம் கருப்பாகவும், பழுப்பு நிறமாகவும் மாறிவிடும்.
மாறிய சருமம் பளபளப்பாக ஜொலிக்க, ஒரு முட்டையின் வெள்ளிக்கரு, அரைக்கப் காபித்தூள், ஒரு டீஸ்பூன் எலும்பிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து முகத்தில் 20 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
முகப்பரு மற்றும் வறண்ட சருமம் : பொதுவாகவே நூற்றில் 90 ஆண்களுக்கு வறண்ட சருமம் இருக்கும். மற்றும் முகப்பரு இருக்கும்.
அதை சரி செய்வது மிக சுலபம் இரண்டு முட்டை வெள்ளைக்கரு, ஒரு டீஸ்பூன் எழுப்பிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
முகச்சுருக்கம் மறைய : முகச்சுருக்கம் உள்ளவர்கள் ஒரு வாழைப்பழம், ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் அரை கப் தயிர் சேர்த்து நன்றாக மசித்து 20 நிமிடம் முகத்தில் ஊற வைத்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரத்தில் 2 முறை இப்படி செய்யலாம்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
வெ.லோகேஸ்வரி