ADVERTISEMENT
சமந்தாவும் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் ஒரே நிகழ்ச்சியிலா..!!
சமந்தாவும் மற்றும் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அதாவது 2024ஆம் ஆண்டான இந்த ஆண்டில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் வெப் சீரிஸ்கள், ஷோக்களை அறிமுகப்படுத்தக்கூடிய நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில்தான் சமந்தாவும் நாக சைதன்யாவும் கலந்துகொண்டார்கள்.
ஒரே நிகழ்ச்சியில் இருவரும் கலந்துக்கொண்டிருந்தாலும் ஒரே நேரத்தில் மேடையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் பார்க்க முடியவில்லை.
சூழ்நிலை இப்படி இருக்க இயக்குநர் கரண் ஜோஹர் காலில் வருண் தவான் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவுடன் உடனடியாக சமந்தாவும் கரண் ஜோஹர் காலில் விழ போனார்.
உடனே கரண் ஜோஹர், நோ நோ என்று சொல்லி சமந்தாவை விழாமல் தடுத்துவிட்டார். இவை அனைத்தையும் நாக சைதன்யா அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார். சமந்தா சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.