பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நாகர் கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை..!!
தமிழ்நாடு மற்றும் இன்றி பிற மாநிலத்தில் உள்ள பெண்களிடமும் சமூகவலைத்தளம் மூலம் சாட் செய்து, நம்பர் வாங்கி, காதலிப்பதாக கூறி சுமார் 120க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார். காதலிப்பதாக கூறி ஏமாற்றுவதே தவறு அதிலும், ஏமாற்றிய பெண்களிடம் பணமோசடியும் செய்துள்ளார்.
காதலிப்பதாக கூறி பல பெண்களுடன் புகைபடம் எடுத்துள்ளார்.., அந்த புகை படங்களை ஆபாச படங்களாக மாற்றி.., பணம் தரவில்லை என்றால் சமூக வலைதளத்தில் விட்டுவிடுவேன் என்று மிரட்டி பணம் பறித்துள்ளார்.
பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.. அதை வீடியோவாக எடுத்து வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.. இதன் பெயரில் கடந்த 2020ம் ஆண்டு நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்ற காசியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்..
கைது செய்த காசியை பாலியல் வன்கொடுமை, போக்சோ, கந்துவட்டி போன்ற வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டார், ஆனால் அந்த வழக்கு உரிய சாட்சிகள் இல்லாததால் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
தற்போது அனைத்து உரிய ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு காசிக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளனர்.. அதன் பெயரில் நேற்று இரவு காசி சிறையில் அடைக்கப்பட்டார்.