அதிநவீன கேமராவுடன் மருத்துவமனையில் நுழைந்த நபர் – நர்சுகள் அலறியடித்து ஓட்டம்..!

நாகர்கோவில் மருத்துவமனையில் அதிநவீன கேமாராவுடன் நுழைந்த நபர் ஒருவர், நர்சுகள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ளது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை. இங்கு வந்த நபர் ஒருவர், அவரது கையில் இருந்த நவீன கேமராவால் நர்சுகள் உடை மாற்றும் அறை அருகே நின்று வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமை ஊழியர்கள் கத்தி கூச்சலிட்டனர். இதையடுத்து கேமராவுடன் வந்திருந்த நபர் தப்பியோட முயன்றுள்ளார். ஆனால், அவரை விரட்டி பிடித்த பொதுமக்களும், மருத்துவமனை ஊழியர்களும் தர்ம அடி கொடுத்து போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் விரைந்து வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த இளைஞர் பெயர் பிரவீன் என்றும், மத்தாரம்புதூரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், அவரிடமிருந்து ஸ்மார்ட்போன் அதனுடன் ஸ்மார்ட் போனில் பொருத்தும் கேமரா லென்ஸையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.இந்நிலையில் கைதாகியுள்ள பிரவீனின் மனைவி இதே மருத்துவமனையில் தான் நர்சாக பணிபுரிந்து வருகிறார் என்ற தகவலும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது

What do you think?

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஜி.எஸ்.டி வரி – நிர்மலா சீதாராமன்

பில்கேட்ஸின் அதிநவீன சொகுசு கப்பல் 4,500 கோடியா?