“நலம் வாழிய நலனே” வள்ளலார் சொன்ன அந்த வார்த்தை..!!
“அருட் பெருஞ் ஜோதி, அருட் பெருஞ் ஜோதி தனிப் பெருங்கருணை..” அருட் பெருஞ் ஜோதி என்று வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என பாடிய வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்களின் 201 வது பிறந்தநாள்..
இன்றைய நாளில் அவர் செய்த தொண்டுகள் பற்றியும்., அவரை பற்றியும் ஒரு சிருதொகுப்பாக படித்திடலாம்.. சத்தியஞான சபையை உருவாக்கிய வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்களின் தாய் திருமதி சின்னம்மையார் அவர்களின் பூர்வீகம் என சொல்லலாம்..
இங்கும் ஒரு சாத்தியஞான சபை கோவில் ஒன்றை உருவாக்கி பல அறப்பணிகளை செய்து வருகிறார் நானும் இன்று பொன்னேரியில் உள்ள அந்த சபைக்கு சென்றேன்..
வள்ளலார் இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் மருதூர் இராமையா பிள்ளை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னகாவனம் திருமதி சின்னம்மையார் தம்பதியினரின் மகனாக அக்டோபர் 5ம் தேதி 1823ம் ஆண்டு பிறந்தார்
இளம் வயதிலேயே தந்தையை இழந்தார் இவரின் உடன் பிறந்த மூத்த சகோதரர் திரு.சபாபதி அவர்கள் சிறந்த சமய சொற்பொழிவாளர் தன் தம்பி இராமலிங்கத்திற்கு நல்ல கல்வியை கற்பிக்க சான்றோர்கள் உலவிய கல்வியில் சிறந்த காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி அவர்களின் குருகுலத்தில் சேர்பித்தார்
ஆனால் இராமலிங்கம் கல்வியில் நாட்டம் கொள்ளாமல் ஆன்மீகத்தில் ஈடுபடலானார் ஒரு நாள் குருகுலத்தை விட்டு வெளியேறி காஞ்சி கந்தக் கோட்டத்தில் அமர்ந்து இறைவனின் அருளைப் பெற்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்.
உள் ஒன்று வைத்து புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்,
பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும்,
பொய்மை பேசாதிருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும்
நின் கருணைநிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும் என்று மனமுருகி பாடிக் கொண்டு இருப்பதைப் பார்த்த குருநாதர் மகாவித்துவான் சபாபதி அவர்கள் தன் மாணவன் இராமலிங்கத்திடம் புதைந்து கிடக்கும் தெய்வீக ஆற்றலை கண்டு கண்ணீர் சொரிந்து வாழ்த்தி அனுப்பி வைத்தார் இப்படியாக ஆறாயிரம் பாடல்களை பாடியுள்ளார் அதன் தொகுப்பே திருவருட்பா
அதற்கு பின் கடலூர் மாவட்டம் வடலூரில் சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தாமரை மலர் வடிவில் நிறுவி நுழைவு வாயிலில் புலை கொலை தவிர்த்தோர் புலால் மாமிச உணவு உண்ணாதவர்கள மட்டுமே உள்ளே புகுதல் வேண்டும் என்று எழுதப்பட்டது. அவர் உருவாக்கிய சத்திய ஞான சபையின் நோக்கம் கடவுள் ஒருவரே அவர் ஜோதி வடிவானவர் அவருக்கு உருவம் இல்லை என்ற கருத்தை வலியுறுத்தியது
தான் சார்ந்த சைவ சமயத்தில் உள்ள பிற்போக்கான மூடப் பழக்க வழக்கங்களை சீர்திருத்தம் செய்தார் மதவெறி கூடாது அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் உன்மையான ஆன்மீகத்திற்கு சாதி ஒரு தடையாய் இருக்க முடியாது ஒழுக்க நெறி இருந்தால் எந்த சாதியினரும் சன்மார்கி ஆகலாம் என்று போதித்தார்
இதை ஏற்க மறுத்து கடுமையாக எதிர்த்தனர் பழைமைவாத சாதி இந்துக்கள் அவருக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வந்தனர் இருப்பினும் தன் வாழ்நாளெல்லாம் சாதி சமய வேறுபாடுகளற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க அரும்பாடு பட்டார்
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்கள் பசிபிணியை போக்க சரியாக 157 ஆண்டுகளுக்கு முன் பிரபவ ஆண்டு வைகாசி மாதம் 23 05 1867 ஆம் ஆண்டு 21 அடி நீளம் 2 1/2 அடி அகலமும் கொண்ட அடுப்பை உருவாக்கி அவர் பற்ற வைத்த நெருப்பு காற்றிலும் மழையிலும் அனையாமல் இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது. நாள் தோறும் ஐந்து வேளை உணவு சமைத்து வழங்கப் பட்டு வருகிறது
அடிகளார் எழுதியது அருட்பா அல்ல என்று இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர் ஆறுமுக நாவலர் என்பவர் மருட்பா என்று ஒரு கட்டுரை வெளியிட்டார் இது அக்காலகட்டத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது
இதுகுறித்து 1869 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வெள்ளைக்கார நீதிபதியின் முன்னிலையில் ஆறுமுக நாவலர் வழக்கு தொடுத்தார்
வழக்கு விசாரணை தொடங்கியபோது நீதிபதி இது குறித்த வள்ளலாரின் கருத்தை கேட்டறிய நீதிமன்றத்திற்கு வரவழைத்தார்
கை வீசி நடப்பதே அகங்காரம் என்று அடக்கத்தை அணிகலனாக கொண்டு அமைதியே வடிவமாக கையை கட்டிக் கொண்டு வள்ளலார் நடந்து உள்ளே நுழையும் போது அனைவரும் எழுந்து நின்று கைகூப்பி வணங்கி நின்றனர் எதிர் வாதியான ஆறுமுக நாவலரும் ஏன் வழக்கத்திற்கு மாறாக நீதிபதியும் கூட எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தார்
நீதிபதி அனைவரையும் அமர செய்து விட்டு வழக்கு விசாரணையைத் தொடங்கினார் நீதிபதி ஆறுமுகநாவலரைப் பார்த்து நீதிபதி கேட்டார் அடிகளார் வருகின்றபோது மக்கள் எழுந்து நின்றார்கள் வணங்கினார்கள் ஆனால் வழக்கு தொடுத்த எதிரி நீங்கள் ஏன் எழுந்து நின்றீர்கள் என்று கேட்டதற்கு வள்ளலார் அவர்கள் அணைவரலும் மதிக்கத்தக்க பெரியவர் அவர் வருகின்றபோது எழுந்து நிற்பது மரபு மரியாதை என்று சொன்னார்
அதற்கு நீதிபதி அப்படி என்றால் பிரதிவாதியான நீங்களே வள்ளலார் மதிக்கத்தக்க பெரியவர் என்பதை ஒப்புக் கொள்கின்றீர்கள் அதோடு அல்லாமல் கைகூப்பி வணங்கியூம் உள்ளீர்கள் அப்படி என்றால் அவர் எழுதியிருக்கும் அருட்பாவும் மதிக்கத்தக்தாகத்தானே இருக்க முடியும் என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்
நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனா
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனா
வலிய வழக்கிட்டு மானம் கெடுத்தேனா
வந்து செல்லும் பாதையில் முள்ளிட்டு அடைத்தேனா களவு செய்வோருக்கு உளவு சொன்னேனா
மனமார்ந்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனா
மண்ணோரம் பேசி வாழ்வை அழித்தேனா
குடிக்கும் நீர் உள்ள குளத்தை தூர்த்தேனா
குடிவரி உயர்த்தி கொள்ளை கொண்டேனா
வேலையிட்டுக் கூலி குறைத்தேனா
பசித்தோர் முகம் பாராதிருந்தேனா
கோள் சொல்லிக் குடும்பத்தைக் கலைத்தேனா குருவை வணங்காமல் கூசி நின்றேனா குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனா
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனா பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனா ஆலயக் கதவை அடைத்து வைத்தேனா பொது மண்டபத்தை இடித்தேனா ஆசைக் காட்டி மோசம் செய்தேனா
கொண்டவளின் கற்பை சந்தேகித்தனே தாய் தந்தை மொழியை தள்ளி நடந்தேனா தெய்வம் இகழ்ந்து செருக்கடைந்தேனா
என்ன பாவம் செய்தேனோ இன்னதென்றறியேனே
அருட் பெருஞ் ஜோதி
அருட் பெருஞ் ஜோதி
தனிப் பெருங்கருணை
அருட் பெருஞ் ஜோதி
வாழ்க வள்ளலார் புகழ்
இதை விட அவரின் சிறப்பு பற்றி சொல்லி விட முடியுமா அல்லது வள்ளலார் பற்றிய தொகுப்பை பதிவிடுவதில் மதிமுகம் என்றும் பெருமைக்கொள்ளும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..