வெயிலுக்கு இதமாக நலங்குமாவு..!
குளிப்பதற்கு நலங்குமாவு
உடலில் தோல் பிரச்சனைகள்,வியர்குரு,துர்நாற்றம் மற்றும் சரும பாதிப்பிற்கு சோப்பிற்கு பதிலாக நலங்குமாவை பயன்படுத்தி குளிக்கலாம்.
விளாமிச்சை வேர், வெட்டிவேர், கோரைக்கிழங்கு, சந்தனசிராய், பூலாங்கிழங்கு,கார்போக அரிசி ஆகியவற்றை தலா 100 கிராம் என்ற வீதம் எடுத்துக் கொண்டு அதனுடன் பச்சை பயிரை 500 கிராம் என்ற அளவு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தினமும் குளிக்க சோப்பிற்கு பதிலாக இந்த மாவை தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் நீரை சேர்த்து குழைத்து உடல் முழுக்க பூசி தேய்த்து குளித்து வர உடம்பு குளிர்ச்சி அடைவதுடன் இயற்கையாகவே ஒரு வித நறுமணமும் கொடுக்கும்.
சருமத்திற்கு இயற்கையாகவே மாய்ஸ்சரை அளிக்கக்கூடியது நலங்குமாவு.இதனால் சருமத்தில் உள்ள தொல்லைகள் நீங்கி சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் காணப்படும்.