ராமராஜன் குறித்த கேள்விக்கு நச் பதில் கொடுத்த நளினி..!
ராமராஜன் நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 80களில் கொடிகட்டி பறந்த நடிகர் களில் இவரும் ஒருவர். இவர் நடிப்பில் வெளிவந்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ஒரு வருடம் ஓடி சாதனைப் படைத்தது. இவர் தற்போது 23 வருடங்களுக்கு பிறகு சாமானியன் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க களம் இறங்கியுள்ளார்.
80-களின் முன்னணிக் கதாநாயகியான நளினி தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மோதலும் காதலும் என்ற சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
நடிகர் ராமராஜன் நடிகை நளினியை 1987ஆம் ஆண்டு பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2000ல் கருத்து வேறுபாடு காரணமாக விவகரத்து பெற்று பிரிந்தனர்.
பாராட்டப்படும் நளினியின் பேச்சு :
சமிபத்தில் ஹோட்டல் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் நளினி. அங்கு அவரிடம் ராமராஜன் குறித்த கேள்வி எழுப்பினர். அதற்கு நளினி அளித்த பதில் நெட்டிசன்களிடம் பாரட்டுகளை குவித்து வருகிறது.
திறப்பு விழா நிகழ்ச்சியின் கலந்து கொண்ட நளினியிடம் செய்தியாளர்கள் பல சுவாரிஸ்யமான கேள்விகளை கேட்டனர். எல்லாம் கேள்விகளுக்கும் சிரித்த முகத்துடன் பதில் அளித்து கொண்டிருந்தார்.
திடிரென ஒரு செய்தியாளர் ராமராஜன் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன..? என்று கேட்க அதற்கு நளினி டக்கென்று சிரித்தபடியே அவரைப் பற்றி பேசுவதற்கு இது தகுந்த இடம் இல்லை. நான் இப்போது ஹோட்டல் திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறேன்.
இங்கு அதற்கு தகுந்த கேள்விகளை கேளுங்கள். அவரைப் பற்றி நீங்கள் வேறு இன்டர்வியூவில் கேளுங்கள் நான் அங்கு நிறைய விஷயங்களை சொல்கிறேன்.
எந்த இடத்திற்கு வந்திருக்கிறோமோ அதற்கு தகுந்த மாதிரிதான் நாம் இருக்க வேண்டும் என்று சிரித்தப்படியே பதில் கொடுத்திருக்கிறார். இதற்கு பலரும் நளினியை பாராட்டி வருகிறார்கள்.
– பவானி கார்த்திக்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..