இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ அகியோர் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 98-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், சென்னை தி.நகரில் நல்லகண்ணுவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ அகியோர் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்
இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர் என்பது குறிப்பித்தக்கது.