“நம்ப சிங்காரி சரக்கு நல்ல சரக்கு..” குடிமகளின் செயலால் பரபரப்பான கோவை..!!
கோயம்புத்தூர் காந்திபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே சாலை ஓரத்தில், ஒரு பெண் மயங்கிய நிலையில் கீழே படுத்துக் கிடந்தார். 25 வயது மதிக்கத் தக்க அந்த பெண் யார் என்று தெரியவில்லை.. நீண்ட நேரமாகவே எந்த ஒரு அசைவும் இல்லாமல் கிடந்தார்.
அங்கு ரோந்து பணியில் இருந்த காட்டூர் காவல்துறையினரும், பெண்ணின் போதை நிலையை பார்த்தும், கண்டுகொள்ளாமல் சென்றனர்.. பகல் நேரத்தில் அந்த பெண் சாலை ஓரத்தில் விழுந்து கிடந்ததால், அவர் இறந்து கிடக்கிறாரா..? என்று கூட சிலருக்கு சந்தேகம் கிளம்பியது..
அதுமட்டுமல்ல, அந்த பெண்ணின் உடல் வெள்ளை துணியால் போர்த்தப்பட்டிருந்தது. இதைப்பார்த்து மொத்த பேரும் பயந்துவிட்டார்கள்.. அதனால், ஒருசிலர் அந்த பெண்ணின் அருகில் சென்று பார்த்தனர்.. அப்போது தான், அந்த பெண் இரவில் இருந்தே அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில், இங்கே வந்து சாலையோரம் விழுந்து கிடப்பது தெரியவந்தது.
இதை கவனித்த ரோந்து பணியில் இருந்த காட்டூர் காவல்துறையினரும், பெண்ணின் போதை நிலையை அறிந்து, அப்படியே விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். எனினும், காட்டூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் வந்து வரவழைத்தனர்.. அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு போதை தெளியவில்லை.
பொதுமக்களில் ஒருவர், அந்த பெண் போர்த்தியிருந்த துணியை விலக்கி விட்டார்.. பின் மறுநாள் காலை அவரது கண்களில் சூரியனின் வெளிச்சம் சுளீரென பட்டதுமே, அரைகுறை போதையில் எழுந்து உட்கார்ந்தார். அப்போது தான், தன்னை வேடிக்கை பார்ப்பதை அறிந்து, அங்கிருந்து எழுந்து குழப்பத்துடனேயே தட்டுத்தடுமாறி சென்றார்.. இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..