உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடகியுள்ள நிலையில் இந்தியாவில் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நாசி வாயிலாக செலுத்த கூடிய வாக்சினுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஒரு வருடமாக கொரோனா பரவலின் தீவிரம் சற்று குறைந்து இருந்தது இதனால், படிபடியாக உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியது இந்நிலையில் மீண்டும் கொரோனாவின் புதிய வகை பிஏப் 7 வகை வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. சீன, அமெரிக்கா நாடுகளில் மட்டுமின்றி இந்தியாவில் இந்த வகை வைரஸ் நான்கு பேரிடம் கண்டறியப்பட்டுள்ளதால். கொரோனா பரவலை தடுக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல நடைமுரைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பாரத் பயோடேக் கண்டுபிடித்துள்ள மூக்கு வழியாக செலுத்த கூடிய தடுப்பு மருந்துக்கு ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது. இன்று முதல் இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவிய தெரிவித்துள்ளார்.மேலும், மூக்கு வழியாக செலுத்த கூடிய இந்த தடுப்பூசியை பூஸ்டர் டோசாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.