தேசிய விருது இயக்குநர் பாலா 58..!
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்கநர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குநர் பாலா. முதன்முதலில் இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம சேது ஆகும். முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் ஆணி அடித்த மாதிரி இடம் பிடித்தார் என்று தான் சொல்லவேண்டும்.
அதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றார். மற்ற இயககுநர்களின் படைப்புகளை காட்டிலும் பாலாவின் படைப்பு தனித்து தான் இருக்கும்.
அந்த வகையில் பாலா தனது படங்களை எப்படி தேர்வு செய்வார் தெரியுமா.. இருட்டிண்ட ஆத்மா’னு ஒரு மலையாளச் சிறுகதை தந்த பாதிப்புதான் ‘சேது’. ராமநாதபுரம் பகுதியில் பார்த்த அகதிகள் முகாம்தான் ‘நந்தா’. ஜெயகாந்தனோட ‘நந்தவனத்தில் ஒரு ஆண்டி’தான் ‘பிதா மகன்’. கமல்ஹாசனின் ‘அன்பே சிவம்’, ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’, காசியில் பார்த்த அகோரிகளின் அமானுஷ்யம் எல்லாம் சேர்ந்து ‘நான் கடவுள்’, ரெட் டீ’ நாவலைத்தான் ‘பரதேசி’ என்று ஒரு படத்துக்கான கதையை முடிவு செய்ததாக பாலா கூறியிருகிறார்.
இன்று முன்னணி ஹீரோக்களாக வளம் வரும் பலரின் கேரியர் கிராப்பை உயர்த்திய பெருமைகுரிய இயக்குநர் மற்றும் பி ஸ்டூடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளரான பாலா தனது 58வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது மதிமுகம் குடும்பத்தினர் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-பவானி கார்த்திக்