மோரோக்கோ நாட்டில் தேசிய துக்க தினம் அறிவிப்பு..!!
மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து100-ஐ தாண்டியுள்ளது, இதனால் 3 நாட்கள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
முக்கிய சுற்றுலா தலமான மராகேஷ் அருகே உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் சுமார் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் உருவானது.
தலைநகர் ரபாத், காசா பிளாங்கா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.
இதனால் மராகேஷ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சரிந்து விழுந்த இந்த கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். இந்த நிலநடுக்கம் நள்ளிரவில் ஏற்பட்டதால் அவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை.
இதனையடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியாகினர்.
இதுவரை அங்கு பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 100-ஐ தாண்டியது. 2 ஆயிரத்து 59 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து, மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதனால் அங்கு 3 நாட்கள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..