“தேசியமும், தெய்வீகமும் எனது இருகண்கள்..” முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை..!!
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு.., தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்.., “தேசியமும், தெய்வீகமும் எனது இருகண்கள் என எப்போதும் முத்துராமலிங்கத்தேவர் சொல்லுவார் என அறிஞர் அண்ணா கூறி கொண்டே இருப்பார்..
வீரராக பிறந்து, வீரராக வாழ்ந்து மறைந்தவர் தான் தேவர் என கலைஞர் எப்போதும் அவரை பற்றி புகழ் பாடுவார்…
அவ்வாறு பெருந்தலைவர்கள் போற்றிய.., முத்துராமலிங்கத் தேவர் அவர்களை போற்றும் விதமாக பல்வேறு நல பணிகளை செய்துள்ளோம்.
அதாவது அவரது பெயரில் நம் திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளது.
மற்றும் அவரது நினைவிடத்தில் 1.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முத்துராமலிங்கத் தேவருக்கு அரங்கம்., மற்றும் அழகப்பா பல்கலைக் கழகத்தில் கல்வி அறக்கட்டளைகளை தொடங்கியுள்ளோம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..