‘வேப்பமரத்திலிருந்து பால் வடியும் அதிசயம்’ ஆச்சிரியத்தில் பொதுமக்கள்

வேப்பமரத்திலிருந்து பால் வடியும் அதிசய நிகழ்வொன்று தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது. இதனை காண ஏராளமானோர் குவிந்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பட்டி சொசைட்டி அலுவலகம் அருகே மாநகராட்சி சிறுவர் பூங்காவில் உள்ள வேப்பமரத்தில் நேற்று இரவு முதல்  லேசாக  பால் போன்ற திரவம் வடிந்தது.

இந்நிலையில்  இன்று  காலை மரம் முழுவதும் பால் கசிய தொடங்கியதால் அந்த வழியாக சென்ற பலர் அதை ஆச்சிரியத்துடன் பார்த்து தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் தீ போல பரவ தொடங்கியதால் அதிசயத்தை காண ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

What do you think?

பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ’விழித்திரு திட்டம்’

அமித்ஷா மிகுந்த வேதனையில் இருப்பார்: சிவசேனா கிண்டல்!