இந்தியா முழுவதும் நீட் தேர்வு..! முழு பூசணிக்காய் சொற்றில் மறைப்பது..! அமைச்சர் மா.சு பேட்டி…!
முறைகேடு மற்றும் குளறுபடிகளால் நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கபட்டுள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீட் தேர்வு குளறுபடி, முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது . நீட் தேர்வு குளறுபடி தொடர்பான வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், அசாதுதீன் அமனுல்லா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீட் தேர்வு குளறுபடி, முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கில் பதிலளிக்க தேசிய தேர்வுகள் முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் நீட் கலந்தாய்வுக்கு தடைவிதிக்கக் கோரிய கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் இதுபோன்ற குளறுபடிகளால் நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் அமைந்துள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சேவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 23 லட்சம் பேர் இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதி இருப்பதாகவும் அதில் எந்த தவறும் நடக்கவில்லை என்று சொல்வது முழு பூசணிக்காய் சொற்றில் மறைப்பது போன்றதாகும் என விமர்சித்தார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..