நீட் தேர்வு முறைகேடு..! 3 எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிரடி கைது..!
பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்களை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்துள்ளது.
இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்பு களுக்கான நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி நடந்தது. 24 லட்சம் மாணவ – மாணவிகள் எழுதிய இந்த தேர்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் சர்ச்சைகளை நாடு முழுவதும் எழுப்பியது.
இந்த சூழலில் நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. நீட் முறைகேடுகள் வழக்குகள் இன்று விசாரணைக்கு வரும் நிலையில் வினாத்தாள் கசிவு தொடர்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்களை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்துள்ளது.
அவர்களது மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகள் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. வினாத்தாள் கசிவு வழக்கில் தொடர்புடைய கும்பலுடன் எய்ம்ஸ்-பாட்னா மாணவர்கள் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இன்றைய உச்சநீதிமன்றதின் விசாரணைக்குப் பின்னர் நீட் தேர்வின் நிலைமை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..