நீட் தேர்வு ரிசல்ட் வெளியீடு.. தமிழக மாணவர்கள் சாதனை.. உயர்ந்தது கட் – ஆஃப்
நீட் தேர்வு:
பொது மருத்துவம், பல் மருத்துவம் போன்ற துறையில் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும்.
இத்தேர்வில், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் 45 வினாக்கள் கேட்கப்பட்டு மொத்தம் 180 வினாக்கள் இடம் பெறும்.
ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு கேள்விக்கு சரியான பதிலளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
தவறான பதில் அளிக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும்.
நீட் தேர்வு ரிசல்ட்:
இந்த நிலையில் நீட் தேர்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4750 தேர்வுமையங்களில் மே 5-ந் தேதி நடைபெற்றது. இதில், 23.33 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 24 மாவட்டங்களில் ஆமைக்கப்பட்ட 200 தேர்வு மையங்களில் 1.52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.
நாடு முழுவதும் தமிழ். ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஓடிசா, அஸ்ஸாமி, வங்காளம். உருது உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் விடைத் தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்று, தேர்வு முடிவுகள் https://www.nta.ac.in என்ற இணையப் பக்கத்தில் நேற்று வெளியானது.
நாடு முழுவதும் மொத்தம் 56.41 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 720 மதிபெண்களுக்கு நடத்தபட்ட நீட் தேர்வில் 67 மாணவர்கள் முழு மதிப்பைண்கள் எடுத்து முதலிடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தைப் பொருத்த வரை சையது ஆரிபின் யூசுப், எஸ்.சைலஜா, ஆதித்ய குமார் பண்டா, பி.ஸ்ரீராம், பி.ரஜனீஷ், எம்.ஜெய்தி பூர்வஜா, ஆர்.ரோகித் எஸ்.சபரீசன் ஆகிய 8 பேர் முழு மதிப்பெண் பெற்று தரவரிசையில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நடப்பு ஆண்டில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றதால் கட்-ஆஃப் மதிப்பெண்களும் உயர்ந்துள்ளது.
-பவானிகார்த்திக்