நீட் வினாத்தாள் கசிவு..! நீதிமன்றம் அளித்த தீர்ப்பு..!!
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது தொடர்பான விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் :
இந்நிலையில் வழக்கில் முதல் குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. கைதானவர்களில் 13 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் நிதிஷ்குமார், அமித் ஆனந்த், சிக்கந்தர், ரோஷன் குமார், மனிஷ் பிரகாஷ், அனுராக் யாதவ், அபிஷேக் குமார் உள்ளிட்ட 13 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
நீட் விவகரத்தில் கைது :
இந்த வழக்கில் இதுவரை 58 இடங்களில் சோதனை நடைபெற்றதாகவும், மொத்தமாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலர் மீது சந்தேகம் உள்ளதாகவும், விசாரணை நாள்தோறும் துரிதமாக நடைபெறுவுள்ளதாக சிபிஐ தெரிவித்திருந்தது…
நீதிமன்றம் விசாரணை :
இந்நிலையில் வினாத்தாள் கசிவை குறித்து இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் பலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுக்கள் மீதான விசாரணை.., உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் முன்பு இன்று விசாரணை செய்யப்பட்டது.
நீதிபதிகள் தீர்ப்பு :
அதன் பின் அந்த வழக்கிற்கான தீர்ப்பு நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினர். நீதிபதிகள் கூறியதாவது., “நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு பரவலாகவும் திட்டமிட்ட ரீதியிலும் நடைபெறவில்லை. இதனால், தேர்வின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாகக் கூற முடியாது. எனவே, இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. என தீர்ப்பை வழங்கினர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..