நீட் வினாத்தாள் கசிவு முறைகேடு..! சிபிஐ விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!
நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் வெளியாகி முறைகேட்டில் ஈடுபட்ட கும்பல் எப்படி செயல்பட்டது என்பது பற்றிய தகவல்களை, சி.பி.ஐ., வெளியிட்டுள்ளது.
மே 5ம் தேதி நாடு முழுவதும் 4750 மையங்களில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.. அதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 4ம் தேதியே முடிவுகள் வெளியானது.
இதனால் வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு மோசடிகள் நடந்ததாக குற்றஞ்சாட்டுகள் எழுந்தது அது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை தொடங்கியது. அந்த விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் இந்த மோசடி நடந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
தேசிய தேர்வு முகமையின் ஒருங்கிணைப்பாளரான ஒயாசிஸ் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஈஷானுல் ஹக், மற்றும் பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் இம்தியாஸ் ஆலமையும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த மோசடியின் முக்கிய நபரான பங்கஜ் குமார் தொடர்பு கொண்டுள்ளார். இவர்கள் மூவரும் இணைந்து, தேர்வு நடந்த மே, 5ம் தேதி காலையில் பாதுகாப்பு பெட்டியில் இருந்து வினாத்தாளை எடுத்து படம் பிடித்துள்ளனர்.
அதன் பின், பீஹாரின் சில பிரபலமான மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலரை, ஹசாரிபாகில் ஒரு இடத்திற்கு வரவைத்து வினாத்தாள்களுக்கு அந்த மாணவர்கள் விடைகள் அளித்துள்ளனர். அதற்காக அந்த மாணவர்களிடம் இருந்து பணம் பெற்றதாக சொல்லப்படுகிறது.
பணம் கொடுத்த, நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள் அதை மற்ற மாணவர்களுக்கும் பகிர்ந்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட பங்கஜ் குமார், தேர்வு நடந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வினாக்களுக்கு விடை எழுதித் தந்த மாணவர்கள், அவற்றை விலைக்கு வாங்கிய மாணவர்கள் என, 35க்கும் மேற்பட்டோர் நீட் முறைகேட்டில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த முறைகேட்டில் இன்னும் பலர் ஈடுபட்டிருக்கலாம் என்ற பல்வேறு கோணங்களில் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..