வெளியான நீட் மறு தேர்வு முடிவுகள்..! தமிழ்நாட்டில் 7 மாணவர்கள்..!
கடந்த மே 5ம் தேதி தேசிய தேர்வு முகமை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வு, 571 நகரங்களில் உள்ள 4,750 மையங்களில், 13 மொழிகளில் நடத்தப்பட்டது. இந்த நீட் தேர்வில் மொத்தம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 மாணவர்கள் எழுதியிருந்தனர். அவர்களில் 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்..
தமிழகத்தில் மட்டும் 8 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆனால் இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கிடையில், நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் கேள்விக்கான விடைக்குறிப்புகள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் மே 29ஆம் தேதி வெளியிட்டது.
மேலும், அதன் மீது மாணவர்கள் தங்களின் ஆட்சேபனைகளை ஜூன் 1ஆம் தேதி வரையில் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது. விடைக்குறிப்புகளை வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்து அவர்கள் வழங்கும் விடைக்குறிப்பே இறுதியானது எனவும் தெரிவித்திருந்தது.
அதுமட்டுமல்லாமல் கடந்த 2024ம் ஆண்டு நீட் தேர்வர்கள் பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில், மே 5ஆம் தேதி அன்று நடைபெற்ற நீட் தேர்வின் சில தேர்வு மையங்களில் கால தாமதம் ஏற்பட்டதாக மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
மேலும், தேர்வை முடிக்க தங்களுக்கு முழுமையாக 3 மணி நேரம் 20 நிமிடங்கள் கிடைக்கவில்லை எனவும் வினாத்தாள்கள் தவறாக விநியோகிக்கப்பட்டது என்றும், ஒரு சிலரின் வினாத்தாள்கள் ஓஎம்ஆர் தாள்கள் கிழிந்து இருந்தது என்றும் முறையிட்டிருந்தனர்..
அதன் பின் அந்த வழக்கு கடந்த மாதம் ஜூன் 13ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. அதாவது சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் இருந்து சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் குறைகளை ஜி.ஆர்.சி குழு மறு பரிசீலனை செய்து.
தேர்வு நேர இழப்பு கண்டறியப்பட்டு, பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு அவர்களின் பதிலளிக்கும் திறன் மற்றும் இழந்த நேரத்தின் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 1563 தேர்வர்களுக்கு நேரமிழப்பு காரணமாக கருணை மதிப்பெண்கள் வ ழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, நீட் தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி கருணை மதிப்பெண் பெற்ற 156 3 மாணவர்களுக்கும் மறு தேர்வு நடத்தப்பட்டது.
சத்தீஸ்கர், சண்டிகர், குஜராத், ஹரியானா மற்றும் மேகாலயா உள்ளிட்ட தேர்வு மையங்களில் இந்த மறு தேர்வு நடத்தப்பட்டது. 1563 மாணவர்களில் 813 மாணவர்கள் மட்டுமே இந்த மறு தேர்வில் பங்கேற்ற நிலையில், மீதமுள்ள 750 மாணவர்கள் பங்கேற்கவில்லை.
மறு தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுவதற்கு முன்பு, நீட் தேர்வில் என்ன மதிப்பெண் பெற்றனரோ அந்த மதிப்பெண்கள் மட்டுமே மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வில் கணக்கில் கொல்லப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மறு தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான தேர்வு மதிப்பெண் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், exams.nta.ac.in/NEET எனும் இணையதளத்தின் மூலம் மறு தேர்வுக்கான முடிவுகளை அறியலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..