நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
2023ம் ஆண்டிற்கான மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு மே 7-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை 499 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 6-ம் தேதி தொடங்கியது. இதனிடையே தேர்வர்கள் இன்று இரவு 11.30-க்குள் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்ப கட்டணம் இரவு 11.59 மணிக்குள் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை (NTA) இளங்கலைப் பட்டதாரிகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்திற்கான கால அவகாசத்தை இன்றுடன் நிறைவு செய்கிறது. இளங்கலை மருத்துவ மாணவர்கள் இப்போது 12 ஏப்ரல் 2023 முதல் இளங்கலை மருத்துவ பட்டப்படிப்பிற்கான நீட் தேர்வுக்கு பதிவு செய்ய இரண்டாவது வாய்ப்பு உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து கட்டணத்தை neet.nta.nic.in இல் செலுத்தலாம்.