புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு..!! தொடரும் மருத்துவர்கள் போராட்டம்..!! நோயாளிகளின் நிலை..?
கொல்கத்தா மருத்துவக் கல்லூரி முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதற்கு நியாயம் வேண்டியும், சேவை மருத்துவர்கள் மீது நடைபெறும் கொலை வெறி தாக்குதலை கண்டித்தும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் இந்திய மருத்துவ கழகம், தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..
கொல்கத்தா மருத்துவக் கல்லூரி முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதற்கு நியாயம் வேண்டியும், சேவை மருத்துவர்கள் மீது நடைபெறும் கொலை வெறி தாக்குதலை கண்டித்தும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் இந்திய மருத்துவ கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய மருத்துவக் கழக கிழக்கு மண்டலத் தலைவர் மருத்துவர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய சுகாதார பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும், மருத்துவமனை வளாகங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும், மருத்துவசேவை செய்யும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில் அரசு மருத்துவர்கள் புறநோயாளி சிகிச்சைபிரிவு பணியை 1 மணிநேரம் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் அவதியடைந்தனர். இந்திய மருத்துவக் கழக மருத்துவர்கள் இன்று காலை 6 மணியிலிருந்து நாளை காலை 6 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சையை மட்டும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..