“நெல்கட்டும் செவல்..” நெல்லைக்கு வரவுள்ள சிறப்புகள்..!! முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கம்..!!
நெல்லையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 75 ஆயிரத்து 151 பயனாளிகளுக்கு 167 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன் பின்னர் 309 கோடியிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார். அதன் பின்னர் உரையாற்றிய அவர்,
இந்தியாவே அடிமைப்பட்டு நெளிந்துக்கொண்டு இருந்தபோது, ஆங்கிலேயருக்கு எதிராக “புரட்சி பூபாளம்” பாடிய மாவீரன் காத்தப்ப பூலித்தேவன் பிறந்த மண், இந்த நெல்லை மண், ஓராண்டு, ஈராண்டு அல்ல,
17 ஆண்டுகள் வெள்ளையருக்கு எதிராக படை நடத்திய பாளையக்காரர்தான் பூலித்தேவன் அந்தப் பூலித்தேவனுக்கு “நெல்கட்டும் செவல்”- இல் நினைவு மண்டபம் அமைத்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
அதேபோல, நம்முடைய ஆட்சியில் தான் நெல்லையப்பர் கோயிலில் பூட்டிக்கிடந்த மேற்கு, வடக்கு, தெற்கு வாசல்கள் திறக்கப்பட்டது. அதேபோல, வரும் நவம்பருக்குள் கோயிலின் வெள்ளித்தேர் ஓடும் என தெரிவித்தார்.
அமைச்சர் நேரு அவர்களைப் பொறுத்தவரைக்கும், எதையும் பிரமாண்டமாக நடத்தித் தான் அவருக்கு பழக்கம். சிறியதாக எல்லாம் அவருக்கு நடத்த தெரியாது; வராது. அதேபோல், அனைத்து மாவட்டங்களையும் தன்னுடைய சொந்த மாவட்டங்களாக நினைக்கும் பரந்த உள்ளம் கொண்டவர் அமைச்சர் நேரு அவர்கள். திருச்சி மண்டலத்தை வளர்த்தெடுத்த அமைச்சர் நேருவுக்கு முதலில் சேலம் மாவட்டப் பொறுப்பை வழங்கினோம்.
சேலத்தை சீர் செய்தார் அடுத்து, நெல்லையை வழங்கினேன். நெல்லையை நேர் செய்துள்ளார் நேரு! ஏராளமான திட்டங்களை உருவாக்கி, அதற்கான நிதிகளையும் பெற்று உரிய காலத்துக்கு முன்னதாக திட்டங்களையும் முடித்துக் காட்டி நெல்லை மாவட்டத்தை சீர்மிகு நெல்லையாக மாற்றிக்கொண்டு வரும் அமைச்சர் நேரு அவர்களுக்கும் இந்த மாவட்ட நிர்வாகத்துக்கும், என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்..
• ஆயிரத்து 304 கோடி ரூபாய் மதிப்பிலான 23 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கும் விழா
• 309 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா
• பல்வேறு அரசுத் துறைகள் சார்பாக 75 ஆயிரத்து 151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்று முப்பெரும் விழாவாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
• பொருநை அருங்காட்சியகத்தைப் பற்றி முதலிலேயே சொன்னேன்.
• தாழையூத்து முதல் ‘கொங்கந்தான் பாறை விலக்கு’ வரை திருநெல்வேலி மாநகருக்கான மேற்குப் புறவழிச்சாலை,
• அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை,
• தாமிரபரணி நதியை நீராதாரமாக கொண்டு 605 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள்,
• களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளில் இருக்கும் குடியிருப்புகளுக்கு 423 கோடியே 13 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் ஆகியவை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
• திருநெல்வேலி மாவட்டத்தில் 2021-22 முதல் டிசம்பர் 2024 வரை 5 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் 405 கோடியே 68 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு, 115 குடியிருப்பு பகுதிகள் பயன்பெறும் வகையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
• திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம்
• முறப்பநாடு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
• மணிமுத்தாறு அணைப்பூங்கா பகுதியில் பல்லுயிர்ப் பூங்கா மற்றும் சாகச சுற்றுலாப் பூங்கா அமைக்கும் பணிகள் பரிசீலனையில் இருக்கிறது.
• திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் பகுதியில் புதிய ஐ.டி. பூங்கா
• வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை
• திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு
மற்றும் ஆய்வகம்
• திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில், இதயம், நரம்பு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களுக்கான உயர்சிறப்பு மருத்துவப் பிரிவு
• அம்பாசமுத்திரத்தில் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம்
• மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு பிரிவு, என்.சி.டி. பிளாக் மற்றும் டயாலிசிஸ் பிரிவு
• பாளையங்கோட்டை வட்டம், முத்தூர் கிராமத்தில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை
• மானூர் வட்டம் மதவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரி
• காணி பழங்குடியின மக்களுடைய நீண்டநாள் கோரிக்கையான விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட காரையாறு – சின்னமயிலாறு இடையே, தாமிரபரணி ஆற்றைக் கடக்க, இரும்பு பாலம் என இப்படி பல திட்டப்பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..